ROMA
ROMA:
2018 -ல் இயக்குநர் அல்போன்சா கிரேன் (Alfonso Cuarón) -ஆல் இயக்கப்பட்ட மெக்ஸிகன் படமாகிய ரோமா ('ROMA') 2019-ல் அயல்நாட்டு மொழிக்களுக்கான மிக சிறந்த படம் என்ற ஆஸ்கார் அவார்டை தட்டி சென்றது.
படத்தின் கதை:
நான்கு பள்ளி செல்லும் பிள்ளைகளும் ஒரு பாட்டியும் உள்ள ஒரு டாக்டரின் வீட்டில் கிளியோ (Cleo) என்ற பெயருடைய பெண் வீட்டு வேலை பார்கிறாள், டாக்டரின் மனைவி சோபியா (Sofia) அவள் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறாள். அவளுக்கும் இந்த குடும்பம் தான் உலகமாக இருக்கிறது. இவளுடன் வேலைபார்க்கும் அதெல (Adela) என்ற மற்றொரு பெண்ணின் உறவுக்காரரான ப்பெர்மின் (Fermin) என்ற இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டு அவனை காதலிக்கிறாள். ஒரு நாள் தியேட்டரில் படம் பார்க்கும் பொழுது, ப்பெர்மின்-னிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக சொல்லுகிறாள், ரொம்ப சந்தோசம் என்று கூறிவிட்டு அவளுக்காக ஐஸ் கிரீம் வாங்க செல்கிறான். படம் முடிந்தும் அவன் திரும்பவில்லை. தியேட்டர் படிக்கட்டில் உட்கார்ந்த வண்ணம் நீண்ட நேரம் காத்திருக்கிறாள்.
கிளியோ (Cleo) தான் உண்டாகி இருக்கும் விஷயத்தை சோபியா-விடம் சொல்லுகிறாள், அவளும் இவளை அரவைணைத்து மகிழ்கிறாள் அது மட்டும் இல்லாமல் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று அங்குள்ள டாக்டரிடம் அதனை உறுதி செய்யசொல்கிறாள், டாக்டரும் பரிசோதனை செய்தபிறது மூன்று மாதம் என்று உறுதி அளிக்கின்றார். ஒரு நிலையில் சோபியா-வும் தனது கணவனால் கைவிடப்பட்டு தனியே வாழும் சூழல் ஏற்படுகின்றது. கிளியோ (Cleo) சேரியில் வாழும் ப்பெர்மினை தேடி வருகிறாள், அங்கு இருக்கும் அவனின் நண்பர்கள் அவன் வெளியே போய் இருக்கான் என்று கூறுகின்றனர், அவள் ஒரு நண்பனிடம் கனிவாக கேட்கிறாள், தயவு செய்து அவர் எங்கு இருப்பார் என்று சொல்லுங்கள், அவனும் அவளின் நிலமையைக்கண்டு உதவ முன் வருகிறான். அவனே தன்னுடைய காரியில் ஏற்றிக்கொண்டு ப்பெர்மின் 'தற்காப்பு கலை' பயிற்சி செய்யும் இடத்தை காட்டுகிறான். ப்பெர்மின் அவளைக்கண்டு கோபம் கொண்டு திட்டுகிறான் ஒரு வேலைக்காரிக்கு நான் தேவையா? என்று சத்தம் போட்டுவிட்டு ஓடிவிடுவதைக்கண்டு மனவேதனை கொள்கிறாள்.
நாட்கள் ஓடுகின்றன... ஒரு நாள் கடை தெருவுக்கு பாட்டியும், இவளும் கார் ஓட்டுனருடன் செல்லும்போது மாணவர்கள் போராட்டம் செய்கிறார்கள், அமைதியாக சென்ற போராட்டம் கலவரமாக மாறுகிறது, அந்த கலவரத்தில் மாட்டிக்கொண்டு பயப்படுகிறாள், பயத்தின் காரணத்தால் பனிக்குடம் நடுரோட்டிலே உடைக்கின்றது. அழுகிறாள் டிரைவர் அவளை அப்படியே தூக்கிக்கொண்டு காருக்குப்போய் மருத்துவமனைக்கு போக முயலுகிறான், ஆனால் கலவரத்தின் காரணமாக ட்ராபிக் ஜாம் ஏற்பட்டு வாகனங்கள் போக முடியாமல் அப்படியே நிற்கின்றன, இவளோ காரிலே இடுப்பு வலியால் துடிக்கிறாள், அழுகிறாள், பாட்டியும் செய்வது அறியாது துடிக்கிறாள். எப்படியோ மருத்துவமனைக்கு வந்து சேர்க்கிறார்கள். உடனடியாக டாக்டர்கள் அவளுக்கு பிரசவம் பார்க்க ஏற்பாடுகளை செய்கிறார்கள், ஆனால் குழந்தைக்கு இதயத்துடிப்பு இல்லை என்று சகமருத்துவர் சொல்கிறார், உடனே அறுவை சிகிக்சைக்கு ஏற்பாடு நடக்கிறது, தாயின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட உயிரற்ற குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி தோற்கின்றனர்., அவளிடம் உனது பெண் குழந்தை இறந்தே பிறந்தது எங்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை என்று மனவருத்தத்துடன் தெரிவிக்கின்றனர், இதை கேட்டு அவளின் கண்கள் கலங்குகின்றன, தவிக்கிறாள்...
சோபியா ஒரு நாள், இரவுஉணவின் பொழுது தன் குழந்தைகளிடம் அப்பா நம்மை தனியே தவிக்கவிட்டு போயிட்டார் என்றும் மீண்டும் வரவே மாட்டார் என்பதையும் சொல்லுகிறாள், குழந்தைகள் இதனை கேட்டு அழுகின்றனர், கிளியோ (cleo) குழந்தைகளை தழுவிக்கொள்கிறாள். மறுநாள் ஒரு சிறிய கார் ஒன்றை சோபியா புதிதாக வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருகிறாள் குழந்தைகள் இதனைக்கண்டு மகிழ்கின்றனர், அப்பொழுது அவள் குழந்தைகளிடம் நாம் அனைவரும் இதனை கொண்டாட வெளியே போகலாம் என்று கூறி, மறுநாள் சோபியா, குழந்தைகள் மற்றும் கிளியோ (cleo) வெளியே காரில் போய்க்கொண்டுயிருக்கும் போது குழந்தைகள் பீச்சுக்கு போகலாம் என்று அடம்பிடிக்கின்றனர், உடனே காரை ஓரமாக நிறுத்திவிட்டு பீச்சுக்கு போய் குழந்தைகள் விளையாடும் போதே யாரும் ரொம்ப உள்ள போகக்கூடாது கரையிலே விளையாடனும் என்று கண்டித்துவிட்டு தங்கும் விடுதிக்கு, சென்று வர சோபியா போனாள், கிளியோ (cleo) -வுக்கு நீச்சல் தெரியாது எனவே அவள் சிறு பிள்ளையுடன் கரையில் இருந்தால் இருப்பினும் அவர்களை எச்சரித்துக்கொண்டே இருந்தாள், திடீரெண்டு கரையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை காணாமல் திடுக்கிட்டு அலறி அடித்துக்கொண்டு ஓடி அலைகளில் புகுந்து தேடினாள், அவர்களின் பெயர்களை சொல்லி கூப்பிட்டு கொண்டே அழுகிறாள், தவிக்கிறாள் இன்னும் கொஞ்சம் ஆழத்துக்கு செல்கிறாள், அலைகளின் நடுவில் ஒருத்தியை பார்த்துவிட்டாள் உடனே அவளிடம் செல்ல அலைகளிடம் போராடுகிறாள், போராடி அவளை இழுத்து தன்னுடன் அணைத்துக்கொண்டு மற்றொவனையும் பெயர்சொல்லி அலறுகிறாள், அவன் தண்ணீரின் ஆழத்தில் போராடிக்கொண்டுயிருப்பதை பார்த்து அலைகளில் முட்டிமோதி சென்று அவனையும் இழுத்துக்கொண்டு மிகுந்த பதட்டத்துடன் கரைக்கு வந்து தேம்பி தேம்பி அழுகிறாள்....
"அவள் செத்து போய் பிறந்ததே நல்லது" என்று முணுமுணுத்தாள்.....

Comments
Post a Comment