ROMA
ROMA : 2018 -ல் இயக்குநர் அல்போன்சா கிரேன் (Alfonso Cuarón) -ஆல் இயக்கப்பட்ட மெக்ஸிகன் படமாகிய ரோமா ('ROMA ') 2019-ல் அயல்நாட்டு மொழிக்களுக்கான மிக சிறந்த பட ம் என்ற ஆஸ்கார் அவார்டை தட்டி சென்றது. படத்தின் கதை: நான்கு பள்ளி செல்லும் பிள்ளைகளும் ஒரு பாட்டியும் உள்ள ஒரு டாக்டரின் வீட்டில் கிளியோ (Cleo) என்ற பெயருடைய பெண் வீட்டு வேலை பார்கிறாள், டாக்டரின் மனைவி சோபியா (Sofia) அவள் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறாள். அவளுக்கும் இந்த குடும்பம் தான் உலகமாக இருக்கிறது. இவளுடன் வேலைபார்க்கும் அதெல (Adela) என்ற மற்றொரு பெண்ணின் உறவுக்காரரான ப்பெர்மின் (Fermin) என்ற இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டு அவனை காதலிக்கிறாள். ஒரு நாள் தியேட்டரில் படம் பார்க்கும் பொழுது, ப்பெர்மின்-னிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக சொல்லுகிறாள், ரொம்ப சந்தோசம் என்று கூறிவிட்டு அவளுக்காக ஐஸ் கிரீம் வாங்க செல்கிறான். படம் முடிந்தும் அவன் திரும்பவில்லை. தியேட்டர் படிக்கட்டில் உட்கார்ந்த வண்ணம் நீண்ட ந...